tamilnadu

img

பிரபல குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவிக்கு கொரோனா தொற்று... 

இம்பால் 
இந்திய குசத்துச்சண்டை அணியில் மகளிர் பிரிவில் (60 kg) விளையாடும் நட்சத்திர வீராங்கனையான சரிதா தேவி மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக அவரது கணவர் தொய்பா சிங் தகவல் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது,"நாங்கள் விரைவில் கொரோனா சிகிச்சை பெறவுள்ளோம், எங்களுடன் தொடர்பில் இருந்த நபர்களையும் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தியுள்ளோம்" என அவர் கூறியுள்ளார். 

சரிதா தேவியின் கணவர் தொய்பா சிங்-கிற்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   

;